மதம் இன்றைய இந்தியாவின் அரசியல் மையம்.
கொள்கைகள் தேவையில்லை
கோட்பாடுகள் தேவையில்லை
நல்லவன் தேவையில்லை
நீதி தேவையில்லை
நியாயம் தேவையில்லை
அமைதி தேவையில்லை
நேர்மை தேவையில்லை
மத உணர்வு ஒன்றே போதுமானது ஒட்டு வாங்க..
மதங்கள் ஏன் தோன்றியது என்பதை நாம் அறிய வேண்டியுள்ளது. எல்லா மதங்களும் ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவை, மனிதனுக்குள் இருக்கும் பொல்லாத குணங்களை கட்டுப்படுத்தி, அவனை கடவுள் என்ற பயத்துக்குள் கொண்டுவந்தது அவனை நாகரீகமானவனாக மாற்ற நடந்த முயற்சியே சமய நம்பிக்கைகள்.
ஆனால் இன்று சமய வாதியாக இருப்பவர்களே நாகரிகமற்றவர்களாக இருக்கிறார்கள்,
இந்த நம்பிக்கையே பின்னாளில் மனிதனை சுரண்டுவதற்கு பயன்பட்டது என்பதற்கு அனைத்து சமயங்களிலும் உதாரணங்கள் இருக்கிறது, கிறிஸ்தவம் மிக வேகமாக வளர்ந்த கி.பி 1500 களில் அன்றைய போப்பு சர்வ அதிகாரம் படைத்தவராக இருந்தார், உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தினார் அரசர்களைவிடவும் அதிகாரம் கொண்டவராக திகழ்ந்தார், அதன் விளைவாக அதை எதிர்த்து உருவான சமய இயக்கங்களே இன்றைய புரட்டஸ்தந்து சபைகள்.
எனவே சமயத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல்களுக்கு எந்த சமயமும் விதி விலக்கல்ல. அதை புரிந்துக் கொள்ளாமல் சமய வெறியோடு செயல்படுவோமானால், நாம் மதம் பிடித்தவர்களாகிவிடுவோம். ஒட்டு வாங்க மதமே போதும் என்றால் இந்த நாடு என்ன ஆகும்???
பிற மதத்தாரை நேசிக்காதே அவர்கள் நல்லது சொன்னாலும் கேட்காதே, அவர்கள் சாக வேண்டியவர்கள் என்று எந்த தெய்வமாவது சொன்னால் அது தெய்வமல்ல உண்மையில் அது பேய். உண்மையில் அப்படி எந்த தெய்வமும் சொன்னதில்லை, ஆனால் வக்கிரம் கொண்ட மனிதர்களே தெய்வங்களின் பெயர்களை சொல்லி இப்படிப்பட்ட கீழ்த்தரமான சிந்தனைகளை புகுத்தி தங்களை அரியணை எரிக் கொண்டு மக்களை சுரண்டி சுகவாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.
என்று தனியும் இந்நிலை.