கபாலி ஒரு புரட்சி
கபாலி படத்தை விமர்சிப்பவர்கள் ரஞ்சித்தின் மீதான வன்மத்தை கொட்டி தீர்க்கிறார்கள். வயிறு எரிச்சலா? இதுதான் தமிழன். இங்கே தமிழர்கள் ஒற்றுமையாய் இருக்கிறார்களாம்.
ஒரு தமிழன் இன்னொரு தமிழனை கீழாக பார்க்கும் அவலத்தின் உச்சம் கபாலி விமர்சனங்களில் கண் கூடாக தெரிகிறது. யார் இந்த சாதியை உண்டாக்கியது தமிழனா? தமிழ் கலாச்சாரமா? நம்மை நிரந்தரமாக ஆள நினைக்கும் நய வஞ்சக கூட்டம் என்பதை எப்படி மறந்தாய் தமிழா?
தலித்துக்கள் படிக்க கூடாது
தலித்துக்கள் விரும்பிய உணவை உண்ண கூடாது
தலித்துக்கள் அரசியல் செய்யக் கூடாது
தலித்துக்கள் விரும்பிய பெண்ணை காதலிக்க கூடாது
தலித்துக்கள் தன்னை நேசித்த பெண்ணை திருமணம் செய்ய கூடாது.
தலித்துக்கள் நடிக்க கூடாது
தலித்துக்கள் படம் இயக்க கூடாது
ஏன் எங்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் வெறுப்புணர்வில் காரி உமிழ்கிறீர்கள். உங்கள் ஆதிக்க போதைக்கு நாங்களா விருந்து.
ஒட்டு மொத்தமாக வாழவே கூடாது என்று முடிவெடுத்து எங்களை கொன்று விடுங்கள். எங்களை அழித்து விடுங்கள் நாங்கள் சாக தயார் ஆனால் அதற்கு பின் நீ உயர்ந்தவனா?
ஹா ஹா ஹா என்ன சொல்ல உனக்கு மேல் ஒருவன் அங்கே காத்திருக்கிறான் உன்னை ஆள தன் ஆதிக்க போதைக்கு உன்னை விருந்தாக்க .
நாம் அடித்துக்கொண்டு நம்மில் யார் செத்தாலும் அவனுக்கு நட்டம் இல்லை. உணரவா போகிறாய் நாம் துண்டாடப்பட்ட பிண்டகளாகி பல நாளாகிவிட்டது.
வலிகளுடன் ... சாம் பிரபா ....