வேதாளம் திரைப்படம் வந்த பொது அதை குறித்து சில விமர்சனங்களை படித்துவிட்டு சிரிப்புதான் வந்தது. அது ஒரு மசாலா படம் அதில் இவர்கள் என்ன எதிர் பார்க்கிறார்கள்? என்னை பொறுத்த வரை வரலாறு வாலி, பில்லா, வில்லன், வரலாறு, வீரம் படங்களுக்கு பிறகு என்னை பெரிதும் திருப்தி படுத்திய படம் வேதாளம். நடிப்பது ஒரு மாஸ் ஹீரோ இயக்குவது ஒரு மசாலா இயக்குனர், இதில் வேறென்ன விமர்சகர்கள் எதிர் பார்க்கிறார்கள். ஒரு ரசிகனை திருப்தி படுத்த தான் படம். ஒரு மசாலா படத்தை மசாலா படமாகவே தான் விமர்சனம் செய்ய வேண்டும். இதை விசாரணை படத்தோடு ஒப்பிடக் கூடாது.
என்னை அறிந்தால் நான் மிகவும் இரசித்த படமல்ல, காரணம் அதில் அஜித்திற்கான மாஸ் மிக குறைவே, அஜித் தான் அதற்கு காரணம் என்பதை கௌதம் அவர்களின் சில பேட்டிகளில் அறிந்தேன். அஜித்தும் சில நேரங்களில் அப்படிப்பட்ட தவறுகளை செய்வது உண்டு, முகவரியில் செய்தது போல, இங்கே லாஜிக் எல்லாம் தேவை இல்லை. அஜித் மாஸ் ஹீரோ அவர் ரசிகன் அவர் படத்தில் என்ன அதிர் பார்க்கிறானோ அது இருக்க வேண்டும். அவை அனைத்தும் சரியாக இருந்தது வேதாளம் படத்தில். எனவே தான் படம் தாறுமாறாக ஓடியது.
தல 57 ம் அப்படியே இருக்கட்டும். அதுவே ரசிகனின் எதிர்பார்ப்பு.
தல 57 ம் அப்படியே இருக்கட்டும். அதுவே ரசிகனின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment