Monday, 28 September 2015

அரசியல் களம் - கேள்விகளை எழுப்புகிறது எனது இதயம்

இதோ அரசியல் களம் புத்துணர்ச்சி பெற்று வருகிறது.

110 விதியின் கீழ் திட்டங்கள் வரிசை கட்டுகின்றன.. 
நிறைவேறுமா? தெரியாது ஆனால் நிறைவேற வேண்டும் எதிர்பார்ப்புக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வீடுதோறும் இணையம்.. பெண்களுக்கு அலைபேசி போன்றவை சிறந்த அறிவிப்புகளாக காண முடிந்தாலும், சில கேள்விகளை எழுப்புகிறது எனது இதயம் .

வேலையின்மை இங்கு பூதாகரமான பிரச்சினை.. 


ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களெல்லாம் இங்கே தினக்கூலிகளாக பிழைப்பு நடத்தி வருகின்றனர். வேலை வாய்ப்புக்கோ வழியில்லை.

இஞ்சினியரிங்  படித்தவர்களெல்லாம் இண்டர்வீவ் இண்டர்வீவ் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

அடிப்படை உரிமையான புத்தாக்க கல்வி தனியார் கையில் பண மூட்டைகளுக்கு நடுவே ஒளிந்துக் கொண்டு பணத்துக்கு ஏற்றவாறு மட்டும் தன தலை வாழ் என தேவைக்கும் மட்டும் காட்டுகிறது.


அரசு பள்ளிகளில் பல மடங்கு இலவசமாக கல்வி தன்னை காட்டினாலும், அங்குள்ள சுகாரமற்ற சுற்று சூழல், அரசு வேலைக்கு அலைந்து பெற்றுக் கொண்டு தன கடமையை செய்யாத சில தேச துரோகி ஆசிரியர்களால் மக்களை ஈர்க்க முடியாமல் முடங்கி கிடக்கிறது. 


பல மடங்கு விலை ஏற்றப்பட்ட அரசு பேருந்து கட்டணம் அதற்கேற்ற வசதியை அல்ல அடிப்படை வசதிகளை கூட தராமல் மக்களை அச்சத்தில் பயணிக்க வைத்திருக்கிறது. இதனால் தனியார் பேருந்துக்கள் மக்களை கொள்ளையடித்து வருகின்றன. 

மது பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு???



இப்படி பல பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லாமல் இலவசம் இலவசம் என்பது எதனால்.. இப்போதைய தேவை புதிய திட்டங்கள் அல்ல இருக்கிற திட்டங்களில் சீர்திருத்தம். அதை செய்யுமா அரசு???????

அப்படியானால் எதிர் கட்சிகள் சரியா? இல்லை  அவர்களை குறித்து விரைவில் வருவேன். 

No comments:

Post a Comment