இளவரசனின் காதல் தோல்வி இன்று வரலாறாகிவிட்டது. எதிர் காலத்தில் இது ஒரு திரைப்படமாக கூட மலரலாம். ஆனால் என் சிந்தனையில் உதித்த சில எண்ணங்கள்...
இளைஞர்கள் காதலிப்பது குற்றம் ஒன்றும் இல்லை. ஆனால் அதை குற்றமாக்க சில குற்றவாளிகள் காத்திருப்பத்தின் விளைவே சில வரலாற்று பிழைகள். இளவரசன் இன்று இணையங்களில் கோலோச்சுவதின் காரணம் காதல் அல்ல.... .சாதியம் ...
இங்கே காதல் குற்றமா இல்லை.. சாதிதான் குற்றம்.. என் நாட்டில் இந்நிலை என்று மாறுமோ தெரியாது ஆனால் இளவரசன் அதை சிந்திக்க வைத்திருக்கிறான் உயிரை கொடுத்து...
மாற்றங்கள் தானே உலக நியதி.. எல்லாம் மாறும் காத்திருக்கிறேன்..
பொதுமக்கள் எப்போதும் இத்தகு செயலை விரும்புவார் இல்லை. ஆனால் சில சமூக சாதிய அமைப்புகளின் வெற்றிக்கு இது போன்ற சம்பவங்கள் தேவைப்படுகிறது. மக்களின் வெற்றிக்கு அல்ல என்பது எம் மக்களுக்கு தெரியும். எனவேதான் தமிழ் நாட்டில் எப்போதும் சாதிய அமைப்புகள் வெற்றி பெற்றதில்லை. அப்படியிருந்தும் ஏன் இது போன்ற சம்பவங்கள் நடை பெறுகிறது என்றால் அங்கேதான் நாம் சிந்திக்க வேண்டும் அவர்கள் நோக்கம் ஆட்சி கட்டிலில் அமர்ந்து இந்த நாட்டை நல் வழியில் நடத்துவது அல்ல மாறாக, ஒரு பதவியை பெ ற்று தங்கள் பிழைப்பை நடத்த வேண்டும் என்பதே.
நீ வாழ பிறரை கெடுக்காதே என்ற ஆட்டோ வாசகம் இவர்கள் நெஞ்சில் எழுதப்பட வேண்டும். உலகில் எப்போதுமே வன்முறைகள் ஜெயித்ததில்லை. வரலாறு தன்னை விரைவில் திருத்திக் கொள்ளும். காலம் இதற்கு பதில் சொல்லும்.
No comments:
Post a Comment