அஜித் அற்புதமான நடிகர் ஆனால் அவரை வைத்து படமெடுப்பது மிகவும் கடினம். ஏனென்றால் ரஜினி மாஸ் என்றால் கமல் க்ளாஸ் . இது இரண்டும் ஒரு நடிகனுக்கு ஒருங்கே அமைவது மிகவும் கடினம். ஆனால் அஜித் என்ற அதி அற்புதமான நடிகனுக்குள் இவை இரண்டும் தானாகவே அமைந்துள்ளது. எனவேதான் அவரை வைத்து படமெடுப்பது மிக கடினம் .
எனக்கு தெரிந்து இதை சரியாக கையாண்டவர்கள் கே.எஸ் .ரவி குமாரும் எஸ்.ஜெ.சூர்யாவும் தான். வாலியும் வரலாறும் பார்த்தால் தெளிவாக புரியும் மாஸுக்கு ஒரு அஜித் க்ளாஸுக்கு ஒரு அஜித் என மிக சரியாக அஜித்தை பயன்படுத்தியிருப்பார்கள் . ஓரளவு அதை தொட்டவர் வெங்கட் பிரபு. பில்லா வும் மாஸ் மற்றும் க்ளாஸ் கலவையில் ஓரளவு பொருந்தியது. எனவே தான் இந்த படங்கள் திரையுலகின் சிகரத்தை தொட்டன.
ஆனால் நம்ம சிவா, அஜித்துக்கு இருக்கும் மாஸ் மட்டும் போதும் என்று படம் எடுப்பதால் அஜித்தின் கிளாஸை ரசிப்பவர்கள் ஏமாந்து போகிறார்கள். அஜித்தை வைத்து படமெடுக்க கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் ஒரு அற்புதமான மனிதரின் கால் ஷீட்டை வீனடித்துவிடுவீர்கள் .
விசுவாசமாய் வா தல... மாஸாக செம க்ளாஸாக.
No comments:
Post a Comment