Friday 30 September 2016

கொலை - கொள்ளை - கற்பழிப்பு


நேற்றைய ஒரு செய்தி இதயத்தை குத்தியது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், நேற்று இரவு 10 பேர் கொண்ட கும்பல் புறநகர் பகுதியில் வசிக்கும் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்துள்ளது. வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் சிறுமியின் பெற்றோர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் சிறுமியின் தந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
 
மேலும், தடுக்கச் சென்ற சிறுமியின் சகோதரனையும் பலமாக தாக்கியுள்ளனர். பின்னர், பெற்றோர்களை வீட்டிற்குள் அடைத்துவிட்டு சிறுமியை அந்த கும்பல் சிறிது தூரம் தரதரவென்று இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. (நன்றி வெப்துனியா)

இத்தகைய குற்றங்களுக்கு யார் காரணம்? ஏன் இத்தகு குற்றங்கள் நடக்கிறது?? இதை தடுக்க முடியாதா? என்று பொது மக்களாகிய நாம் யோசிக்கிறது உண்டா? 

அன்றைய சினிமாக்களை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புரியும். MGR தன திரைப்படங்களில் புகைப்பிடிப்பதையோ, மது அருந்துவதையோ காட்சியாக வைத்ததில்லை. மது அருந்துபவன், புகை பிடிப்பவன் பெண்ணை மதிக்காதவன் வில்லனாக சித்தரிக்கப்படுவான்.  இது திரைப்படம் தானே என்று அவர் நினைத்ததில்லை. காரணம் அது ஒரு காட்சி ஊடகம், ஒரு குடும்பமே அதை பார்த்து இரசிக்கிறது, குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள்,  பெற்றோர்கள், முதியவர்கள் என அனைவரும் பார்க்கும் மாபெரும் ஊடகம் தான் சினிமா. அந்த பொறுப்போடு திரைப்படங்கள் அக்காலத்தில் உருவாக்கப்பட்டன. 

ஆனால் இன்று இளைஞர்கள் தானே திரைப்படத்திற்கு வருகிறார்கள் அவர்கள் ரசிப்பதை எடுத்தால் போதும் என்று நினைப்பீர்கள் அது உண்மையல்ல, ஏன் இளைஞர்கள் மட்டும் வருகிறார்கள் என்று யோசிக்க வேண்டும்!!! குடும்பங்கள் பார்க்கும் வண்ணம் இன்றைய திரைப்படங்கள் இல்லாததே காரணம். வானத்தை போல, வீரம், வேதாளம், காதலுக்கு மரியாதை, ஆனந்தம், தவமாய் தவமிருந்து, கபாலி போன்ற பல மாபெரும் வெற்றி படங்கள் பெண்களை மதிக்கிற காட்சியமைப்புகள் உள்ள  படங்களே, இப்படங்களை குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து மக்கள் ரசித்தார்கள். ஆனால் இன்று பல சினிமாக்கள் வெறும் ஆபாச குப்பைகளாக வருகின்றன. ஒரு திரைப்படத்தில் நண்பர்கள் பேசுகின்றனர், அப்போது ஒருவன் இன்னொருவனை பார்த்து கூறுகிறான் மச்சான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ என்று, அவன் ஏண்டா என்பான் அதற்கு மற்றவன் அப்பத்தாண்டா நாங்க ஜாலியா இருப்போம் என்கிறான். உடனே அனைவரும் சிரிக்கின்றனர். இதுவா? சமூக பொறுப்பு?? 

சீரியல்கள் சொல்லவே தேவையில்லை. பிறன் மனை விரும்பா கதைகளே இல்லை. செய்தி ஊடகங்கள் தேவையற்ற தங்கள் அரசியல் பாசத்தை வெளிப்படுத்தும் விவாதங்களை நடத்தி வருகின்றன. சமூகத்தை பற்றிய கவலை துளியும் இல்லை. என்ன காரணம் சரியான சட்டங்கள் இல்லை, தணிக்கை துறை விலை போகிறது அதை தடுக்க வேண்டிய அரசியல் தலைவர்கள் துணை போகிறார்கள். 

அரசியல்வாதிகள் தங்கள் வெற்றிக்காக ஜாதி, மத, இன மொழி, கலவரங்களை தூண்டிவிடுகின்றனர். குற்றங்களை கூட அரசியலாக்கவே விரும்புகின்றனவே தவிர உண்மையை வெளிக்கொணர உதவவில்லை. யோசித்து பாருங்கள் இந்த நாடு என்னவாகும்? மக்களே நாமுண்டு நம் வேலையுண்டு என்று இருப்போமானால் இவை மேலும் பெருகும். 

நல்ல படித்த பண்பான மக்களை நேசிக்கும் புரட்சிகரமான தலைவர்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் ஊர் பஞ்சாயத்து தேர்தலில் கூட கட்சி பார்க்காதீர்கள், தலைவனை பார்க்காதீர்கள் நல்லவனை மட்டும் பாருங்கள் அப்போதுதான் இந்த நாட்டிற்கு விடியல், நல்லவர்கள் ஒதுங்கினால் அவர்களை ஊக்கப்படுத்தி அரசியலுக்கு கொண்டு வாருங்கள். இது ஜனநாயக நாடு நாமே சக்தி, நமதே வெற்றி. 

Wednesday 28 September 2016

தொடரி தோல்வியா?



என்ன ஆச்சு இப்படத்திற்கு? ஒரு ஆக சிறந்த இரயில் படம் தான் தொடரி. படத்தில் முதல் பாதியும், இரண்டாம் பாதி மிக விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டுள்ளன, அப்படியிருந்தும் ஏன் சரியான ஓப்பனிங் இல்லை?? தனுஷின் மீதான ஈர்ப்பு குறைகிறதா?

என்னை பொறுத்த வரை இது தனுஷிற்கான  கதை அல்ல, ஒரு புது முகத்திற்கான கதை. தனுஷின் வேலையில்லா பட்டதாரிக்கு பிறகு ஒரு சிறந்த மாஸ் ஹீரோவாக மாறிவிட்டார். இந்நிலையில் இப்படி ஒரு புது முகத்திற்கான கதையை அவர் தெரிந்தெடுத்ததே பாராட்டுதலுக்குரியது. பழைய எந்த படங்களின் சாயலும் இல்லாமல் தனுஷால் மட்டுமே நடிக்க முடியும். அற்புதமான நடிப்பு. அந்த கதா பாத்திரத்திற்கு என்ன வேண்டுமோ அதை தவிர வேறு எதுவும் தனுஷிடம் இல்லை. இப்படி ஒரு நடிகன் தமிழ் சினிமாவிற்கு நிசசயம் மகுடம்.

ஆனால் விளம்பரம் மிக குறைவாக உள்ளதாக நான் கருதுகிறேன். மாரி  படத்திற்கு செய்யப்பட விளம்பரத்தில் கால் பங்கு கூட இதற்கு செய்ய வில்லை. கதையின் மீதான நம்பிக்கை காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று ரசிகன் தியேட்டருக்கு வர வேண்டுமானால் விளம்பரம் மிக முக்கியம். முதல் நாளே ஒரு திரைப்படம் இணையத்தில் வெளி வரும் இக்காலத்தில் ரசிகன் தியேட்டருக்கு வர வேண்டுமானால் கபாலியின் யுக்தியே சிறந்த யுக்தி. விளம்பரம் விளம்பரம். சில நேரங்களில் சிறந்த படங்களுக்கு அது  கிடைக்காமல் போய் விடுகிறது. அப்படித்தான் தொடரியை பார்க்கிறேன். 

வேதாளம் எனும் அதிரடி..



வேதாளம்  திரைப்படம் வந்த பொது அதை  குறித்து சில விமர்சனங்களை படித்துவிட்டு சிரிப்புதான் வந்தது. அது ஒரு மசாலா படம் அதில் இவர்கள் என்ன எதிர் பார்க்கிறார்கள்? என்னை பொறுத்த வரை வரலாறு வாலி, பில்லா, வில்லன், வரலாறு, வீரம் படங்களுக்கு பிறகு என்னை பெரிதும் திருப்தி படுத்திய படம் வேதாளம். நடிப்பது ஒரு மாஸ் ஹீரோ இயக்குவது ஒரு மசாலா இயக்குனர், இதில் வேறென்ன விமர்சகர்கள் எதிர் பார்க்கிறார்கள். ஒரு ரசிகனை திருப்தி படுத்த தான் படம். ஒரு மசாலா படத்தை மசாலா படமாகவே தான் விமர்சனம் செய்ய வேண்டும். இதை விசாரணை படத்தோடு ஒப்பிடக் கூடாது.


 என்னை அறிந்தால் நான் மிகவும் இரசித்த படமல்ல, காரணம் அதில் அஜித்திற்கான மாஸ் மிக குறைவே, அஜித் தான் அதற்கு காரணம் என்பதை கௌதம் அவர்களின் சில பேட்டிகளில் அறிந்தேன். அஜித்தும் சில நேரங்களில் அப்படிப்பட்ட தவறுகளை செய்வது உண்டு, முகவரியில் செய்தது போல, இங்கே லாஜிக் எல்லாம் தேவை இல்லை. அஜித் மாஸ் ஹீரோ அவர் ரசிகன் அவர் படத்தில் என்ன அதிர் பார்க்கிறானோ அது இருக்க வேண்டும். அவை அனைத்தும் சரியாக இருந்தது வேதாளம் படத்தில். எனவே தான் படம் தாறுமாறாக ஓடியது.

தல 57 ம் அப்படியே இருக்கட்டும். அதுவே ரசிகனின் எதிர்பார்ப்பு.