Wednesday 30 August 2017

அஜித் எனும் இமயம்

அஜித் என்ற நடிகனை, வாலி என்ற படத்தில் தான் முதல் முதலாக ஈர்ப்போடு பார்த்தேன், அப்போது எனக்கு 15 வயது, இப்படி ஒரு நடிப்பை, என் காலத்தில் முதன் முறையாக  பார்க்கிறேன், ஆர்ப்பாட்டம் இல்லாமல், அனைவரையும் கவர்ந்திழுக்கும்  அற்புதமான நடிப்பு,  பிறகு தீனா, சிட்டிசன் என, இளைஞர்களை  தன் வசம் கட்டிப்போட்ட மாபெரும் கலைஞன்.

ஆனால் பிறகு கார் பந்தயத்தில் கவனத்தை திருப்பி மிக மோசமான ஆழ்வார் போன்ற அதி பயங்கரமான மொக்கை படங்களில் நடித்து அவர் திரை வாழ்க்கை ஏனோ தானோ என்று இருந்தது,  வெறி கொண்ட அஜித் ரசிகனாய் அவர் திரைப்படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு வேதனையோடு திரும்பி வந்திருக்கிறேன். ஆஞ்சநேயா, ஜனா, ராஜா, ஆழ்வார் போன்ற படங்கள் கர்ண கொடூரமானவை, அவைகளையே இரண்டு முறை பார்த்த வெறி பிடித்த ரசிகன் நான்.

நன்கு நடிக்க தெரிந்த, திரை ஆளுமை கொண்ட, கட்டுக்கடங்கா வெறி பிடித்த  இளைஞர்களை ரசிகர்களாக கொண்ட ஒரு கலைஞன் இப்படி தன்னையும் தன் முழு பலத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருந்த காலம் அது, இடை இடையே,  வில்லன் , வரலாறு என சில ஆறுதல் ..

இப்போதுதான், பில்லா, மங்காத்தா, வீரம், அன்னை அறிந்தால், வேதாளம் என வெகுஜன மக்களை கவரும் சுமாரான  படங்களை  நடிக்க துவங்கியிருக்கிறார். நான் மொக்கை படங்களை பார்க்கும்போதே சொன்னதுண்டு, இநத ஆள் மொக்க படத்துக்கே இத்தனை கூட்டம் கூடுதே, நல்ல படங்களில் நடித்தால் என்ன ஆகும்?? இந்த நாடே அதிரும் என்று. இப்போது விவேகம் என்ற  சுமார் படத்துக்கே  நாடே அதிருகிறது.

ஆனால் இது சுமார் படமல்ல, மிக சரியாக திட்டமிடப்பட்ட வியாபார திரைப்படம். இதை புரிந்துக்கொள்ள வேண்டுமானால், அஜித்தின் வியாபாரத்தை புரிந்துக்  கொள்ள வேண்டும்,

அஜித்தின் வியாபாரம் தமிழில் மட்டும் தான். வெளி நாடுகளில் சிவ கார்த்திகேயனைக் கூட தல நெருங்கவில்லை என ஐயங்காரன் நிறுவனம் ஒரு முறை கூறியதை நினைவில் கொள்க.

இதை சரியாக தல உணர்ந்து, தமிழ், தெலுங்கு, கேரளா, இந்தி  மற்றும் வெளி நாட்டு வியாபாரத்தை குறி வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது, இதை இப்படி புரிந்துக் கொள்ளலாம்.

தமிழுக்கு - தல, தல, தல, தல மட்டும்தான்.
தெலுங்கு - வேகமான, காரமான திரைக்கதை.
மலையாளம் - கணவன் மனைவி செண்டிமெண்ட், டெக்னாலஜி.
இந்தி- விவேக் ஓபராய். டெக்நாலாஜி .
வெளி நாடு-  ஹாலிவுட் தர முயற்சி. மேற்கண்ட அனைத்தும்.

இவை சரியான விகிதத்தல் இப்படத்தில் சிவாவால் உருவாக்கப்பட்டுள்ளது. அது மிக சிறந்த பலனை கொடுத்துள்ளது.

அதை உடைக்கவே எதிர்மறை விமர்சனம் என்ற பெயரில் பகிரப்பட்ட கேவலமான தனி மனித தாக்குதல், ப்ளூ சட்டை சொல்றாரு, அஜித் காஜல் அப்பா மகள்  மாறி இருக்குனு. இது எவ்வளவு கேவலமான வக்கிர சிந்தனை. திரைக்கதை, ஒளிப்பதிவு, ஆங்கில படங்களுக்கு இணையான உழைப்பு, அஜித்தின் அற்புதமான தோற்ற மாற்றம். இது எதையும் எதிர்மறை விமர்சனங்கள் சொல்லவில்லை. எனவே அவை விமர்சனங்களல்ல, அஜித்தின் வளர்ச்சியை பிடிக்காதோரின் சதி.

இப்படம் தோற்றிருந்தால், அஜித்தின் ஒட்டு மொத்த சினிமா வணிகமும் கேள்விகுறியாகியிருக்கும். அது நடக்கவே, பாடுபட்டார்கள் சிலர். உண்மையும் உழைப்பும் தோற்பதில்லை.

அஜித் எதிரிகள் தொட முடியா இமயம். 

No comments:

Post a Comment