Thursday 1 November 2018

என்று தனியும் இந்நிலை.



மதம் இன்றைய இந்தியாவின் அரசியல் மையம்.

கொள்கைகள் தேவையில்லை
கோட்பாடுகள் தேவையில்லை
நல்லவன் தேவையில்லை
நீதி தேவையில்லை
நியாயம் தேவையில்லை
அமைதி தேவையில்லை
நேர்மை தேவையில்லை

மத உணர்வு ஒன்றே போதுமானது ஒட்டு வாங்க..

மதங்கள் ஏன் தோன்றியது என்பதை நாம் அறிய வேண்டியுள்ளது. எல்லா மதங்களும் ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவை, மனிதனுக்குள் இருக்கும் பொல்லாத குணங்களை கட்டுப்படுத்தி, அவனை கடவுள் என்ற பயத்துக்குள் கொண்டுவந்தது அவனை நாகரீகமானவனாக மாற்ற நடந்த முயற்சியே சமய நம்பிக்கைகள்.

ஆனால் இன்று சமய வாதியாக இருப்பவர்களே நாகரிகமற்றவர்களாக இருக்கிறார்கள்,

 இந்த நம்பிக்கையே பின்னாளில் மனிதனை சுரண்டுவதற்கு பயன்பட்டது என்பதற்கு  அனைத்து சமயங்களிலும் உதாரணங்கள் இருக்கிறது, கிறிஸ்தவம் மிக வேகமாக வளர்ந்த கி.பி  1500 களில் அன்றைய போப்பு சர்வ அதிகாரம் படைத்தவராக இருந்தார், உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தினார் அரசர்களைவிடவும் அதிகாரம் கொண்டவராக திகழ்ந்தார், அதன் விளைவாக அதை எதிர்த்து உருவான சமய இயக்கங்களே இன்றைய புரட்டஸ்தந்து சபைகள்.

எனவே சமயத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல்களுக்கு எந்த சமயமும் விதி விலக்கல்ல. அதை புரிந்துக் கொள்ளாமல் சமய வெறியோடு செயல்படுவோமானால், நாம் மதம் பிடித்தவர்களாகிவிடுவோம். ஒட்டு வாங்க மதமே போதும் என்றால் இந்த நாடு என்ன ஆகும்???

பிற மதத்தாரை நேசிக்காதே அவர்கள் நல்லது சொன்னாலும் கேட்காதே, அவர்கள் சாக வேண்டியவர்கள் என்று  எந்த தெய்வமாவது சொன்னால் அது தெய்வமல்ல உண்மையில் அது பேய். உண்மையில் அப்படி எந்த தெய்வமும் சொன்னதில்லை, ஆனால் வக்கிரம் கொண்ட மனிதர்களே தெய்வங்களின் பெயர்களை சொல்லி இப்படிப்பட்ட கீழ்த்தரமான சிந்தனைகளை புகுத்தி தங்களை அரியணை எரிக் கொண்டு மக்களை சுரண்டி சுகவாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.

என்று தனியும் இந்நிலை.

Friday 6 April 2018

போராட்ட களமான தமிழகம்



தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக துவங்கிய போராட்டம், இன்றும் பல கோரிக்கைகளுக்காக நீண்டுக்  கொண்டே போகிறது.

டாஸ்மாக் கடைகளை மூட
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக
மீத்தேன் திட்டத்திற்கு எதிராக
காவிரி மேலாண்மை அமைப்பதற்காக

என தொடர்ந்து போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது..

மக்களுக்கு எதிரான இந்த செயல்களில் ஈடுபடுவது யார்???

நம்மை ஆள்வதர்காக நாம் ஏற்படுத்திய அரசாங்கம்

அப்படியானால், தவறு யாரிடத்தில் உள்ளது??

நம்மிடத்தில் என்பதை நாம் ஒப்புக்கொண்டே  ஆக வேண்டும்..  நாம் ஒட்டு போடும் போது அவர்களது கவர்ச்சி அறிவிப்புகளை பார்த்தோமே தவிர, மக்கள் நல திட்டங்கள் என்ன?
பொருளாதார திட்டங்கள் என்ன?
கல்வி வளர்ச்சி திட்டங்கள் என்ன?
தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டங்கள் என்ன?
என்று பார்க்கவில்லை..

இலவசமாக என்ன கிடைக்கிறது என்பதில் காட்டிய கவனத்தை நாம் இதில் காட்டவில்லை என்பது எத்தனை பெரிய உண்மை. அதனால் தான் இப்போது அனுபவிக்கிறோம்.

சுவிஸ் நாட்டில் அந்த அரசாங்கம் ஒவ்வொரு தனி நபருக்கும் மாதம் 1.71 லட்சம் தர முன்வந்தது ஆனால் மக்கள் அதை நிராகரித்தனர். அதனால்தான் அங்கே அரசாங்கம்  மக்கள் வளர்ச்சி திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்த முடிகிறது, ஆனால் இங்கே இலவசமாக சில சில்லறை பொருட்களை வாரி இறைத்தால் ஆட்சி கிடைத்துவிடும். பிறகு ஆற அமர கொள்ளையடிக்கலாம்.

இனியாவது திருந்துவோம் வருகிற தேர்தலில், இலவசங்களை பார்க்காமல், ஜாதியை பார்க்காமல், மதத்தை பார்க்காமல், தலைவர்களை பார்க்காமல் தேர்தல் வாக்குறுதிகளின்  தரத்தை பார்த்து வாக்களிப்போம். இல்லையேல் வாழ் நாள் முழுக்க போரடிக்க கொண்டே தான் இருக்க வேண்டும்.


Tuesday 13 March 2018

கிறிஸ்தவர்களும் இசுலாமியர்களும் இந்த நாட்டில் இருக்க கூடாது..

H.ராஜா  சில நாட்களுக்கு முன்பு பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்கிறார்.. ஏன்  என்றால் பெரியார் கடவுளே இல்லை என்று கூறியவர். இந்த ஆன்மீக பூமியில் கடவுளே இல்லை என்று கூறிய ஒருவரின் அடையாளம் கூட இருக்க கூடாது என்கிறார். 



முதல் கேள்வி இறை நம்பிக்கை என்பது ஒருவரது தனிப்பட்ட உரிமை. அதில் எப்படி இன்னொருவர் தலையிடலாம். ஒரு கடவுள் நம்பிக்கையோ பல கடவுள் நம்பிக்கையோ கடவுளே இல்லை என்பதோ ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கை இன்னொருவர் நான் நம்புவதை நம்ப வேண்டும் என்று ஏன் கட்டாய படுத்த வேண்டும்????

இரண்டாவது பெரியார் ஏன்  கடவுள் இல்லை என்று கூறினார் என்ற வரலாறையே மறைக்க பார்க்கிறார்கள். கடவுள் நம்பிக்கை தவறானது என்பதற்காக அல்ல, கடவுள் பெயரை சொல்லி மனிதனை உயர்ந்தவன் தாழ்ந்தவன்  என்று சொன்ன அக்கிரமத்தை எதிர்த்தவர், ஒருவேளை இந்த வேற்றுமையை இறைவன் அனுமதிப்பாரானால் அவன் இறைவனே இல்லை என்கிறார். இதில் என்ன தவறு.

மூன்றாவது  பெரியார் இல்லை என்றால் இந்து மதம் இத்தனை நாள் இத்தனை பெருமையோடு வாழ்ந்திருக்குமா என்பதே சந்தேகம், காரணம் அனைத்து மக்களும் போய் கடவுளை வணங்க உரிமை பெற்று தந்தவரே இவர் தான். இவர் இல்லை என்றால் இன்று பெரியார் சிலையை உடைக்கிற இவர்கள்  கோயிலுக்குள்ளேயே போயிருக்க மாட்டார்கள், இன்னும் கொஞ்ச நாள் பெரியார் வாழாமல் போய்விட்டார் அவர் வாழ்ந்திருந்தால் இந்நேரம் இவர்கள் கருவறைக்கே போக உதவியிருப்பார். 

இந்த வரலாறு தெரியுமா??? இன்றைய தலை முறைக்கு??? இந்த வரலாறு தெரியாததின் விளைவு என்ன தெரியுமா?

உடைக்க சொன்னவர் மன்னிப்பு கேட்டு தன்னையும் தன்  பதவியையும் காத்துக் கொண்டார்  உடைத்தவர் தான் பாவம் கம்பி எண்ணுகிறார். 

எவ்வளவு பெரிய அறியாமை இந்த நாட்டுக்குள் வந்து விட்டது..

பி.ஜெ.பி ஆட்சிக்கு வரும்போது என்ன சொல்லி ஒட்டு கேட்டார்கள் ? 

ஊழலை ஒழிப்போம் - ஒழிந்து விட்டதா? இல்லை பெருகி விட்டதே 

கருப்பு பணத்தை மீட்போம்  - மீட்டு விட்டார்களா? இல்லை புது பணத்தையே பதுக்கி வைக்கும் தாராள தைரியசாலிகள் பெருகிவிட்டார்கள். 

அந்நிய முதலீடுகளை தடுப்போம் - அடடே எவ்வளவு பெரிய பொய்.. மேக் இன் இந்தியா என்பது என்ன???????? உள் நாட்டு முதலீடா?  அந்நிய முதலீடா? 

மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும்  - நடந்ததா? சாமியார்கள் தான் 1000 கோடிகளில் தழைக்கிறார்கள். கேட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள் அவர்கள் பொது மக்களா??? 

எந்த நல்ல திட்டத்தையும் செயல் படுத்த வக்கில்லாத அரசு இது ஆனால் அவர்களுக்கு வெற்றி மட்டும் வேண்டும்!!!! எப்படி வெற்றி வரும் மனிதனை மனிதனை பிரித்தால் போதும்  அதில் எவன் அதிகமாக இருக்கிறானோ அவனை ஆதரித்தால் போதும் ஒட்டு தானாய் வந்து விடும் அதைத்தான் பி.ஜெ.பி செய்து வருகிறது. இதை உலகில் எவரும் புரிந்துக் கொள்ளாமல் போகட்டும் தமிழனுக்கு புரியாதா... புரியும் அதனால் தான் இந்தியாவே                                  பி.ஜெ.பி ன்  வலையில் சிக்கினாலும் அது தமிழ் நாட்டில் நோட்டாவிடம் சிக்குகிறது. 

அதை மாற்றவே இப்போது மத மோதல்களை துவக்கியுள்ளது. கிறிஸ்தவர்களும் இசுலாமியர்களும் இந்த நாட்டை விட்டு வெளியே போய் விட்டால் நாடு வளர்ந்து விடுமா?? இல்லை நாடு சுடுகாடாகும், இசுலாமியர்களும் கிறிஸ்தவர்களும் இருக்கும் வரை இங்கே வர்ணாசிரமம்  தலை தூக்க முடியாது, ஒரு வேளை  கிறிஸ்தவர்களும் இசுலாமியர்களும் வெளியேறிவிட்டால் இந்த நாடு வர்ணாசிரமத்திலிருந்து தப்ப முடியாது. 



அது மட்டுமா? அவர்களது பள்ளிகள், கல்லூரிகள், சேவை மையங்கள் அனைத்தும் மூடப்படும், இந்தியா பாதுகாப்பற்ற நாடாக மனிதாபிமானமற்ற நாடாக  உருவாகும். 

கிறிஸ்தவ நாட்டிலும் இசுலாமிய நாடுகளிலும் வாழும் கோடிக்கணக்கான இந்துக்கள் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள்  ஆனால்  சொந்த  நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களும் இசுலாமியர்களும்  பயந்து பயந்து வாழ்கிறார்கள் அதுவும் மத சார்பற்ற நாட்டில். ஏன் சில பேருடைய சொந்த சுய நலத்திற்காக. பதவி ஆசைக்காக, இதையும் மீறி கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில் வாழக்க் கூடாது என்று தொடர்ந்து கூறினால், அவர்களது அறியாமையை கண்டு வேதனைதான் படமுடியும் வேறென்ன செய்ய முடியும்???? 

மனிதனை காக்க தான் எந்த கடவுளும், மனிதன் கடவுளை காக்க வேண்டியதில்லை. கடவுளை காக்க மனிதனை கொல்ல  மட்டுமல்ல அடிக்க மட்டுமல்ல, திட்ட மட்டுமல்ல, முறைக்க சொன்னால் கூட அது கடவுளே இல்லை. அது எந்த கடவுளானாலும். மனிதன் ஆன்மாவிலும் ஆராயத்திலும், மனிதாபிமானத்திலும், பாதுகாப்பிலும் வாழவே மதங்கள் தோன்றின ஆனால் அந்த மதங்களாலேயே இன்று மனிதன் அழிகின்றான் சில சுய நலமான  மிருகங்கள் சுகமாய் வாழ்கிறது. 

Wednesday 3 January 2018

அழகு பதுமை கீர்த்தி சுரேஷ்.



நான் பார்த்த சமீப கால நடிகைகளில் என்னை மிகவும் கவர்ந்த அழகான மற்றும் நடிக்க தெரிந்த ஒரு நடிகை கீர்த்தி தான். அவர் நடித்த தொடரி படத்தில் அந்த சிம்பிளான உடைகளிலேயே என் கண்களை கட்டி போட்டார்.

பிறகு விஜயின் பைரவா படத்தை கீர்த்திக்காகவே பார்த்தேன். அந்த படத்தில் கீர்த்தியை தவிர பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. அவ்வளவு அழகு. அதுவும் அந்த கூலிங்கிளாஸ் போட்ட அழகு நாள் முழுக்க ரசிக்கலாம். 

ரெமோ படத்தில் அழகான டாக்ட்டராக அந்த கேரக்டருக்கு தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்திருந்தார். ஒவ்வொரு காட்சியிலும் காண்போரை கொள்ளை கொள்ளும் அழகு. அந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் கீர்த்தி. 



அவ்ளோ அழகான அந்த பொண்ண பாவம் நம்ம இன்டெலிஜெண்ட் மீம் கிரியேட்டர்ஸ் ஒரு கொண்ட போட்டதுக்கு  போட்டு தள்ளிட்டாங்களே. 

விசுவாசமாய் வா தல


அஜித் அற்புதமான நடிகர் ஆனால் அவரை வைத்து படமெடுப்பது மிகவும் கடினம்.  ஏனென்றால் ரஜினி மாஸ் என்றால் கமல் க்ளாஸ் . இது இரண்டும் ஒரு நடிகனுக்கு ஒருங்கே அமைவது மிகவும் கடினம். ஆனால் அஜித் என்ற அதி அற்புதமான நடிகனுக்குள் இவை இரண்டும் தானாகவே அமைந்துள்ளது. எனவேதான் அவரை வைத்து படமெடுப்பது மிக கடினம் .

எனக்கு தெரிந்து இதை சரியாக கையாண்டவர்கள்  கே.எஸ் .ரவி குமாரும் எஸ்.ஜெ.சூர்யாவும்  தான்.  வாலியும் வரலாறும் பார்த்தால் தெளிவாக புரியும் மாஸுக்கு ஒரு அஜித் க்ளாஸுக்கு ஒரு அஜித் என மிக சரியாக அஜித்தை பயன்படுத்தியிருப்பார்கள் . ஓரளவு அதை தொட்டவர் வெங்கட் பிரபு. பில்லா வும் மாஸ் மற்றும் க்ளாஸ் கலவையில் ஓரளவு பொருந்தியது. எனவே தான் இந்த படங்கள் திரையுலகின் சிகரத்தை தொட்டன. 

ஆனால் நம்ம சிவா, அஜித்துக்கு இருக்கும் மாஸ் மட்டும் போதும் என்று படம் எடுப்பதால்  அஜித்தின் கிளாஸை ரசிப்பவர்கள் ஏமாந்து போகிறார்கள். அஜித்தை வைத்து படமெடுக்க கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் ஒரு அற்புதமான மனிதரின் கால் ஷீட்டை வீனடித்துவிடுவீர்கள் .

விசுவாசமாய் வா தல...  மாஸாக செம க்ளாஸாக.